சுண்ணாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரிக்கு செல்லும் பிரதமர்- எதற்கு தெரியுமா?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுண்ணாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் 125வது ஆண்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

ஸ்கந்தவரோத கல்லூரியின் 125வது ஆண்டு விழா வரும் திங்கட் கிழமை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக பாடசாலை பழைய மாணவர்களால் செய்திக்குறிப்பொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில்,

சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் 125வது ஆண்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் 15ம் திகதி திங்கட் கிழமை இடம்பெறும். நிகழ்வுகள் பாடசாலை அதிபர் எம்.சிவஸ்தான் தலைமையில் இடம்பெறும்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனின் அழைப்பின் பெயரில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம விருந்தினராக கலந்து கொள்வார் என்றும் குறிப்பிடபப்ட்டுள்ளது.

அத்துடன், ஸ்கந்தவரோதயா கல்லூரியில் 55 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படும் கலையரங்கத்திற்கான அடிக்கல்லையும் பிரதமர் நாட்டி வைப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜகலா மகேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.