வரலாற்றில் முதன் முறையாக வெளிநாடொன்றில் இடம்பெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நேபாளத்திலும் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

13 ஆவது தெற்காசிய விளையாட்டுப்போட்டி நேபாளத்தில் நடைபெறவுள்ள நிலையில்

அதில் க. பொ.சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள ஏழு பரீட்சாத்திகள் பங்கேற்கவுள்ளனர்.

இந்தநிலையிலேயே, குறித்த ஏழு பரீட்சாத்திகளும் நேபாளத்தில் வைத்து பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தப் பரீட்சை நேபாளத்தில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்திலேயே, நடைபெறவுள்ளது.

குறித்த பரீட்சையானது இலங்கையில் பின்பற்றப்படும் அதே ஒழுங்குவிதிகளுக்கு அமைவாகவே நேபாளத்திலும் நடத்தப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை பரீட்சைகள் திணைக்களமும், வெளிவிவகார அமைச்சும் இணைந்து இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.