தேர்தலில் வாக்களிக்க 700,000 அஞ்சல் விண்ணப்பங்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க 700,000 அஞ்சல் வாக்கு விண்ணப்பங்கள் தேர்தல்கள் செயலகத்திற்கு வந்துள்ளதாக செயலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விண்ணப்பங்களை ஆராய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு , தொடர்ந்து இறுதி எண்ணிக்கையிலான அஞ்சல் வாக்காளர்கள் முடிவு செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

அந்தவகையில் தேர்தல் கடமைகளில் ஈடுபடுபவர்கள், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அதிகாரிகள், காவல்துறை மற்றும் இராணுவ வீரர்கள் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்கள் அஞ்சல் வாக்களிப்புக்கு தகுதியுடையவர்கள் ஆவார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு ஒக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.