எந்த கட்சியையும் சாராது சுயாதீனமான கடமையாற்றுவேன்

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று தான் தெரிவானால் எந்த கட்சியையும் சாராது சுயாதீனமான கடமையாற்றுவேன் என தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு - மன்றக்கல்லூரியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நான் ஓய்வு பெற்ற போது நாட்டுக்காக சேவை செய்த மனதிருப்தியுடன் ஓய்வு பெற்றிருந்தாலும் , அதன் பின்னர் நாட்டின் நிலைவரத்தை உணர்ந்து இன்னும் இந்நாட்டு செய்ய வேண்டிய சேவைகள் இருப்பதை உணர்ந்துதான் தேர்தலில் களமிறங்க தீர்மானித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது தமது இயக்கத்தில் சுமார் 30 சிவில் சமூக அமைப்புக்கள் எம்முடன் கைகோர்த்திருப்பதாகவும் கூறிய அவர் , மின்குமிழ் ' சின்னத்திலேயே தேர்தலில் களமிறங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த தேரதலில் தான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி என்றும், மகேஸ் சேனநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமது தேர்தல் விஞ்ஞாபனம் அடுத்த வாரமளவில் வெளியிடப்படும் என்றும், இதன்போது தமது வேலைத்திட்டங்களை குறித்து மக்களால் அறிந்து கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்..