மகத்தான வெற்றி பெற்றார் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது பிரசார கூட்டமொன்றில் துப்பாக்கிச் சூட்டினை நடத்தி ஒருவரை கொலை செய்ததுடன் இருவருக்கு காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக பிரேமலால் ஜயசேகரவிற்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இந்நிலையில் பிரேமலால் ஜயசேகரவினுடைய பெயர் வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட மாட்டாது என்றும், எனவே தற்போது அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை இல்லை என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது.

தற்பொழுது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர தற்போது நடைப்பெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு இரத்தினபுரி மாவட்டத்தின் மகத்தான வெற்றியை பெற்றுள்ளார்.

இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் விருப்பு வாக்கு நிலவரம்

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி

பவித்ரா வன்னியாராச்சி- 200,977

பிரேமலால் ஜயசேகர- 104,237

ஜனக வக்கும்புர- 101,225

காமினி வெலேபொட- 85,840

அகில எல்லாவெல- 71,179

வாசுதேவ நாணயக்கார- 66,991

முடித்த பிரஷாந்தி- 65,933

டபிள்யு.டி.செனவிரத்ன- 61,612

ஐக்கிய மக்கள் சக்தி

ஹேஷா விதானகே- 60,426

வருண லியனகே- 47,494

தலதா அதுகொரல- 45,105