பிக்பாஸையும் கமல்ஹாசனையும் கடுமையாக சாடிய பிரபல இயக்குனர்!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் கடந்த மாதம் துவங்கியது. 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள இந்நிகழ்ச்சிக்கு எதிர்ப்புகளே அதிகமாக வலுத்து வருகின்றன.

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபல இயக்குனர் கௌதமன் சமீபத்திய பேட்டி ஒன்றில் திட்டி தீர்த்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று இருக்கும் போட்டியாளர்கள் அணியும் ஆடைகள் குறித்தும், கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் பயன்படுத்தும் வசனம் குறித்தும் இயக்குனர் கெளதமன் குற்றச்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து போட்டியில் தெரிவித்தது,

ஜட்டியோடு பெண்கள் ஆண்களுடன் சுற்றுகிறார்கள். உங்களது வீட்டில் இவ்வாறெல்லாம் சுற்ற முடியுமா?, கை, கால்களில் முடி தெரியும்படி பெண்ணின் ஆடையை ஆண் அணிந்து கொள்வதை எல்லாம் குடும்பத்துடன் பார்க்க முடியுமா?

இந்நிகழ்ச்சியை போன்று இத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் கலக்க போவது யாரு நிகழ்ச்சியிலும் அவர்கள் வசனங்கள் டபுள் மீனிங்கை தாண்டி ட்ரிபில் மீனிங்கில் சென்று கொண்டிருக்கிறது என காட்டமாக கூறினார்.

மேலும் இதை மக்கள் எச்சரிக்கை விடுக்கும் முன் தொலைக்காட்சி நிர்வாகமே சரி செய்ய வேண்டும். இதுபோன்ற நிகழ்ச்சிகளை கமல் தொகுத்து வழங்குகிறார். இவரை எப்படி அரசியலில் தலைமையாக பார்க்க முடியும் எனவும் கூறியுள்ளார்.