தாய் பாசத்தின் உச்சம்! ஆக்ரோஷமாக டிராக்டர் முன்னால் குதித்த குட்டிப்பறவை!வைரல் வீடியோ

தாய் பாசத்துக்கு இந்த உலகத்தில் எதுவுமே ஈடாகாது என்பார்கள். அது மனிதர்களுக்கு மட்டுமல்லாது மற்ற ஜீவராசிகளுக்கும் பொருந்தும்.

தான் இட்ட முட்டைகளை, டிராக்டர் ஒன்று ஏற்ற வந்தபோது, அதற்கு முன்னர் குதித்து, தாய் பறவை ஒன்று முட்டைகளைக் காப்பாற்றியுள்ளது .

இதுதொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள சி.ஜி.டி.என் செய்தி நிறுவனம், சீனாவில் உள்ள உலாங்காப் நகரத்தில் மனதை உருகச் செய்யும் இச்சம்பவம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

காவி நிறத்தில் இருக்கும் ஓர் ஒரு சிறிய பறவை, தனது இறக்கைகளை விரித்தபடி, ஆக்ரோஷமாக டிராக்டர் முன்னால் குதிக்கிறது. இதைப் பார்த்த டிராக்டர் ஓட்டுநன், வண்டியை நிறுத்தியுள்ளார். அப்போதுதான் பறவை, ஏன் இப்படி நடந்து கொண்டது என்பது அவருக்கு புரிந்தது. தனது முட்டைகளைக் காக்கவே தாய் பறவை, அப்படி ஆக்ரோஷமாக நடந்து கொண்டதை ஓட்டுநர் உணர்கிறார்.

இதையடுத்து அவர் , பறவைக்கு ஒரு பாட்டிலில் நீரையும் வைத்துள்ளார். இந்நிலையில் இது சம்பந்தமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றது.