மணமேடையில் மணமகளை தூக்கிய மணமகன் என்ன செய்தார் தெரியுமா?... வைரல் வீடியோ!

பொதுவாக திருமணம் நாள் என்பது மணமக்களிற்கு மட்டுமன்றி அதில் கலந்துகொள்கின்ற பலருக்கும் மறக்கமுடியாத ஒரு நாள். அங்கு இடம்பெறும் சடங்குகள், விளையாட்டுகள் என அந்த நாள் பலருக்கும் மறக்க முடியாத நாளாக அமைந்துவிடும்.

அதோடு நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் வந்திருந்து கேலி, கிண்டல் என மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்கள்.

மேற்கு வங்கத்தில் இடம்பெற்ற ஒரு திருமண நிகழ்வில், இந்த மணமக்களுக்கு ஏற்பட்டதை வாழ்வில் யாராலும் மறக்க முடியாது எனகூறலாம்.

என்னவெனில் மணமேடையில் திருமண சடங்கின் போது, மணமகன் , மணமகளை தூக்கும்போது சரியாக தூக்காததால் அப்படியே குப்புற விழுந்துவிடுகின்றார் அந்த மணப்பெண்.

இந்த நிகழ்வு திருமண மண மேடையில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

இந்நிலையில் இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.