வடிவேலுடன் இணைந்த பிள்ளையானின் பிரச்சார பீரங்கி செல்வியின் வைரல் வீடியோ

எதிர்வரும் 16 ஆம் திகதி நாட்டில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் வேட்பாளர்களும் , அவர்களின் ஆதரவாளர்களும் பிரச்சார நடவைக்கையில் தீவிரமாகியுள்ளனர்.

பிள்ளையானின் பிரச்சார பீரங்கி செல்வியைக் கண்டதும் மக்கள் வீடுகளை மூடிவிட்டதுடன் நாய்கள் மட்டும் குரைத்து செல்வி அணியைத் துரத்திய வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது....

அந்தவகையில் கோத்தபாயவிற்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பில் தீவிர பிரச்சார துண்டுபிரசுர விநியோகத்தில் பிள்ளையான் அணியின் மகளிர் அணி தலைவி செல்வி ஈடுபட்டுள்ளார்.

சுழன்று அடிக்கும் சூறாவளிபோல கோத்தபாயவிற்காக அவர் துண்டுபிரசுர விநியோகத்தில் மகளிர் படையணியுடன் இறங்கியுள்ளார்.

இந்த நிலையில் மீம் கிரியேட்டர்ஸ் கையில் சிக்கி செல்விவி சின்னாபின்னமாகியுள்ளார்.

குறித்த காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.