அழுது கொண்டு வெளியேறிய தர்ஷன்....!தேடும் சனம் க்ஷெட்டி?

பிக்பாஸ் தர்ஷன் நடிகையும் மாடலுமான, சனம் ஷெட்டியை நிச்சயதார்த்தத்தின் பின் கழற்றி விட்ட விவகாரத்தில் சிக்கலில் சிக்கியுள்ளார்.

பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் அவர் தற்போது, வெளியில் தலைகாட்டாமலிருப்பதாக கூறப்படுகிறது.

சனம் ஷெட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில், தர்ஷன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே பிணை வேண்டும் என தர்ஷன் நீதிமன்றத்தை அணுகிய போது அவருடைய வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும் கடைசியாக பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக சென்ற தர்ஷன், விசாரணை முடிந்த பின் அழுதபடியே வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் சனம் ஷெட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என நடிகையின் தரப்பில் கூறப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதோடு தர்ஷன் எங்கு சென்றார் என்பதும் தெரியாத சனம் ஷெட்டி, தர்க்ஷனை தேடி பிடித்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொலிஸ் நிலையத்தில் போராடி வருகிறாராம் .