ரம்யா பாண்டியன் அம்மாவை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் அழகிய புகைப்படம்!

இலங்கை வம்சாவளியை சேர்ந்த நடிகை ரம்யா பாண்டியனுக்கு தற்போது அறிமுகமே தேவை இல்லை. ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் அவர்.

ஆண் தேவதை, ஜோக்கர் போன்ற படங்களில் நடித்துள்ளார். அவர் கையில் மேலும் பெயரிடப்படாத இரண்டு படங்கள் இருக்கிறது.

அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமடைந்ததுடன் கலக்கப்போவது யாரு சீசன் 9 நடுவராகவும் பங்கேற்றார்.

தற்போது புகழ்பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு கொண்டுள்ள ரம்யா,

சிறப்பாக விளையாடி வருகிறார்.

நேற்றைய டாஸ்க்கில் போட்டியாளர்களும் அவர் தான் வெற்றி பெறுவார் என்று கூறியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் ரம்யா பாண்டியனின் குடும்பத்தை பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இலங்கை பின்புலத்தை கொண்ட தந்தை சினிமா தயாரிப்பாளர். இவரது சித்தப்பா அருண்பாண்டியன் புகழ்பெற்ற தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார்.

இந்நிலையில் அவர் தனது தாயாருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

பார்ப்பதற்கு அச்சு அசல் ரம்யா பாண்டியன் போலவே இருக்கிறார் அவரது தாயார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.