ஐரோப்பிய நாடுகளில் உறைபனி அபாயம் - இராணுவத்தினரை ஈடுபடுத்த அரசு திட்டம்

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் நிலவும் பனிப்புயல் மற்றும் உறைபனி நிலைமைகளை அடுத்து அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உச்சகட்டமாக ஜேர்மனியில் கடும் பனிப்பொழிவு நிலவுகின்றது. இதுவரை குளிர் மற்றும் பனிச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே அடுத்த சில நாட்களில் பனி பொழிவின் அளவு 6 அடி வரை உயரும் என்று ஜேர்மனி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் ஜேர்மனி, ஒஸ்ரியா உள்ளிட்ட நாடுகளில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீதிகளில் தேங்கியுள்ள பனியை அகற்றுவதற்கு இராணுவத்தினரை ஈடுபடுத்த ஜேர்மனி அரசு திட்டமிட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உறைபனி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.