இரண்டு முறை உலகக் கோப்பையை பிரான்ஸ் வெல்வதற்கு காரணமான முக்கிய மனிதர்! புதிய சாதனை படைத்தார்

பிரான்ஸ் இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றதைப் போலவே, அந்த அணியின் பயிற்சியாளர் டிடியர் டெஸ்சாம்ப்ஸ்க்கும் இது இரண்டாவது உலகக் கோப்பையாகும்.

21வது ஃபிபா உலகக் கோப்பை போட்டியில் இன்று நடந்த பைனலில் 4-2 என்ற கோல் கணக்கில் குரேஷியாவை வென்றது பிரான்ஸ். இதன் மூலம் 1998க்குப் பிறகு இரண்டாவது முறையாக பிரான்ஸ் கோப்பையை வென்றுள்ளது.

அதே நேரத்தி்ல அந்த அணியின் பயிற்சியாளரான டிடியர் டெஸ்சாம்ப்ஸ்க்கும் இது இரண்டாவது உலகக் கோப்பையாகும். 1998ல் பிரான்ஸ் உலகக் கோப்பையை வென்றபோது, அணியில் அவர் வீரராக இருந்தார். தற்போது பயிற்சியாளராக உள்ளார்.

கடந்த 6 ஆண்டுகளாக பிரான்ஸ் அணியின் பயிற்சியாளராக அவர் செயல்பட்டு வருகிறார்.

இதற்கு முன் பிரேசிலின் மரியோ ஜகாலோ மற்றும் ஜெர்மனியின் பெக்கன்பியூர் மட்டுமே வீரராகும், கோச்சாகவும் உலகக் கோப்பையை வென்றுள்ளனர். தற்போது அந்த வரிசையில் டெஸ்சாம்ப்ஸ் இணைந்துள்ளார்.