ஈழத் தமிழரை திரும்பிப் பார்க்க வைத்த பிரான்ஸ் பெண் பொலிஸ்

பிரான்ஸின் பாரிஸ் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாரிஸ் மாணிக்கப்பிள்ளையார் தேர்த்திருவிழாவின் போது போக்குவரத்து கடமையில் ஈடுபட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தலையில் பூ அணிந்து கடமையில் ஈடுபட்டனர்.

தலையில் பூ அணிந்து கடமையில் ஈடுபட்ட பிரான்ஸ் பெண் பொலிஸ்

பாரிஸ் மாணிக்கப்பிள்ளையார் தேர்த்திருவிழாவில் பாரிஸ் வாழ் தமிழர்கள் பலர் கலந்து கொண்ட நிலையில் திருவிழாவில் கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸார் தமிழ்ப்பெண்கள் அணிவது போல தலையில் பூமாலை அணிந்து காணப்பட்டனர்.

தலையில் பூ அணிந்து கடமையில் ஈடுபட்ட பிரான்ஸ் பெண் பொலிஸ்

இதனை பார்த்து தமிழர்கள் ஆச்சரியமடைந்துள்ளதுடன் குறித்த புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்து தலையில் பூ வைத்து செல்ல விரும்பாத தமிழ் பெண்கள் இவர்களை பார்த்தாவது தம்மை மாற்றிக்கொண்டு தமிழ் கலாச்சாரத்தின் சிறப்பையும் பெருமையையும் விளங்கிகொள்ளவேண்டும்.