பிரான்ஸில் சாதனை படைத்த இலங்கை தமிழ் பெண்!

பிரான்ஸில் நடைபெற்ற சர்வதேச அழகு கலை போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய ஜெயபிரகாஷ் கயல்விழி இரண்டாவது இடத்தை தன்வசப்படுத்திக் கொண்டார்.

பிரான்ஸ் தலைநகர் பரிசில் இந்த போட்டி நேற்று முன்தினம் இடம்பெற்றிருந்ததுடன், அவருக்கான பரிசில்கள் நேற்றிரவு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் பிரசித்தி பெற்ற அழகு கலை நிபுணராக ஜெயபிரகாஷ் கயல்விழி, சர்வதேச ரீதியில் பல போட்டிகளிலும் பங்குப்பற்றியுள்ளமை விசேட அம்சமாகும்.

சர்வதேச ரீதியில் இடம்பெறும் அழகு கலை போட்டியொன்றில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி முதன்முறையாக ஜெயபிரகாஷ் கயல்விழி பதக்கமொன்றை வெற்றிகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.