பிரான்சில் சிக்கலில் பல தமிழர்கள்! மேலும் பலர் கைது செய்யப்படும் ஆபத்து..

பிரான்சில் வாகன ஓட்டுனர் உரிமத்தை சட்டவிரோதமாக பெற்றுக்கொடுத்த நபர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தமிழர்கள் சிலர் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.

வாகன ஒட்டுனர் பயிற்சி மையத்தில் முறையாக பயின்று பெற்றுக் கொள்ள வேண்டிய உரிமத்தினை, 4000 யுரோக்கள் வரை சட்டத்துக்கு புறம்பான முறையில் பலர் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இவ்வாறு சட்டத்துக்கு புறம்பாக ஓட்டுனர் உரிமத்தினை பெற்றுக் கொண்டவர்களில் சில தமிழர்களும் அடங்குகின்றனர் என அறியமுடிகின்றது.

பரிசின் புறநகர் பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக இது நடைபெற்று வந்துள்ளதாக மாவாட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். Saint-denis பகுதியில் அமைந்துள்ள சாரதி பயிற்சி நிலையம் ஒன்றே இந்த நடவடிக்கையில் மையமாக ஈடுபட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் தமது நீண்ட புலனாய்வு நடவடிக்கைகளுக்கு பின்னர் Val-de-Marne, Seine-Saint-denis ஆகிய இடங்களில் 9 பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் ஊடாக சாரதி உரிமத்தினை சட்டதுக்குப் புறம்பாக முறையற்று பெற்றுக் கொண்டவர்கள் தொடர்பில் புலனாய்வுத்தகவல்களை காவல்துறையினர் தமது விசாரணை மூலம் வெளிக்கொண இருப்பதோடு, 2020ம் ஆண்டு இவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளனர். 10 ஆண்டு சிறைத்தண்டனை உட்பட 1 மில்லியன் தண்டம் விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.