வரலாற்று ஆசிரியர் ஒருவரை கொடூரமாக கொலை செய்த மாணவன்: வெளியான அதிர்ச்சி காரணம்

வரலாற்று ஆசிரியர் ஒருவர் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டியதால் அதில் கோபமடைந்த நபர் ஒருவர் ஆசிரியரை கொலை செய்த சம்பவம் பிரான்சில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரான்ஸின் பாரிஸ் புறநகர்ப் பகுதியில் வரலாற்று ஆசிரியர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், படுகொலை செய்யப்பட்டார். பாடசாலையின் அருகிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் குறித்த ஆசிரியர் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டியதால் கோபமடைந்த ஒரு நபர் அவரை கொன்றதாக தெரியவந்தது.

குறித்த குற்றவாளியை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் பிரான்சில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி பொலிஸார் தெரிவிக்கையில், ‘நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை வகுப்பிற்கு காட்டியதால் ஆத்திரமடைந்த ஒரு நபர் அந்த ஆசிரியரின் தலையை வெட்டி கொலை செய்துள்ளார்.

மேலும், தாக்குதல் நடத்திய நபர், செசென் பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளைஞர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அத்தோடு, பொலிஸார் குறித்த மாணவனை கைது செய்ய முற்பட்ட போது தப்பியோடியதாகவும், இதனால் அம் மாணவனை சுட்டுக் கொன்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.