ரயில் டிக்கெட் வழங்கும் இயந்திரம் ஒன்றை நக்கி கொரோனாவை பரப்ப முயன்ற நபர்! ஜேர்மனியில் சம்பவம்

ஜேர்மனியில் ரயில் நிலையம் ஒன்றில் ரயில் டிக்கெட் வழங்கும் இயந்திரம் ஒன்றை நக்கி கொரோனாவை பரப்ப முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முனிச் நகரில், ரயில் டிக்கெட் வழங்கும் இயந்திரம் ஒன்றையும், அதன் கைப்பிடியையும், எஸ்கலேட்டர் ஒன்றின் கைப்பிடியையும் ஒருவர் நக்கும் வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டன.

தான் கொரோனாவை பரப்ப விரும்புவதாகவும், அதற்காகவே இவ்வாறு செய்ததாகவும் அந்த நபர் அந்த வீடியோக்களில் தெரிவித்திருந்தார்.

வீடியோவில் தோன்றிய அந்த 33 வயது நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அந்த நபர் மீது, உடலில் மோசமான அளவில் காயம் ஏற்படுத்துதல் என்ற குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளார் அவர்.

ஆனால், அவருக்கு உண்மையாகவே கொரோனா தொற்று உள்ளதா என்று தெரியவில்லை என்று கூறியுள்ள பொலிஸ் செய்தி தொடர்பாளர் ஒருவர், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

loading...