லாக்டவுன் தொப்பையா? இரண்டே வாரத்தில் குறைக்க எளிய வழி..!

லாக்டவுன் பலரையும் சோம்பேறியாக்கிவிட்டது எனில் அதை யாரும் மறுக்க முடியாது. ஏனெனில் சாப்பிடுவது என ஒரு குழு இருந்தாலும் சிலர் அமர்ந்தபடியே வீட்டில் அலுவலகப் பணியை பல மணி நேரம் செய்கின்றனர்.

இதனால் உடலுக்கு கொஞ்சமும் உடல் உழைப்பு இல்லை. போததற்கு ஜிம்மும் இல்லை. எனவே உடல் எடை என்பது அதன் விருப்பம் போல் பெருகிவிட்டது.

இதுகுறித்த ஆய்வுகள் பலவும் வெளிவந்தன. குறிப்பாக பலருக்கும் புதிதாக தொப்பை உருவாகியிருக்கிறது. இதை ஸ்டைலாக பலரும் லாக்டவுன் தொப்பை என்கின்றனர்.

சொல்லிக்கொள்ள ஸ்டைலாக இருந்தாலும் நடைமுறைக்கு அது சாத்தியப்படாது. எனவே இரண்டே வாரத்தில் அந்த தொப்பையைக் குறைக்க இந்த யோசனைகளை பின்பற்றுங்கள்.

நார்ச்சத்து உணவு :

நார்ச்சத்து நிறைந்த உணவு கொழுப்பைக் கரைக்க உதவும். செரிமானத்தை அதிகரிக்கும். எனவே நார்ச்சத்து நிறைந்த பீன்ஸ் வகைகள், காய்கறிகள், நட்ஸ், அவகடோ, சோளம் போன்ற உணவுகளை சாப்பிடுங்கள்.

உடற்பயிற்சி :

இனியும் உடலுக்கு அசைவுக் கொடுக்காமல் இருந்தால் வேளைக்கு ஆகாது.எனவே குறைந்தது நடைபயிற்சியாவது மேற்கொள்ளுங்கள். முடிந்தால் தினமும் வீட்டில் ஸ்கிப்பிங் செய்தாலே தொப்பையைக் குறைக்கலாம்.

கிரீன் டீ :

கிரீன் டீ குடிப்பது உடல் எடையைக் குறைக்கும் என சொல்லப்படுகிறது. எனவே உடலில் உள்ள கலோரிகளைக் கரைக்க கிரீன் டீ குடிக்கப் பழகுங்கள். பால் டீ, காஃபியை தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை :

சர்க்கரை உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே எந்த பானங்கள், உணவிலும் சர்க்கரையை தவிருங்கள். அதற்கு மாற்று வழிகளை தேர்வு செய்யுங்கள். தேன், பனை வெல்லம், நாட்டுச் சர்க்கரை என பயன்படுத்தலாம்.

ஜங் ஃபுட் தவிர்க்க :

பீட்ஸா, பர்கர், பதப்படுத்தப்பட்ட உணவு, ஜங்க் ஃபுட், எண்ணெய்யில் பொறித்த உணவு , ஃபாஸ்ட் ஃபுட், நொருக்குத் தீனி என உடலுக்கு எந்த ஊட்டச்சத்தும் இல்லாத இந்த உணவுகளை ருசிக்காகக் கூட தொடாதீர்கள்.

மேலே குறிப்பிட்ட விஷயங்களை முறையாக செய்து வந்தால் லாக்டவுனால் உருவான தொப்பையை இதே லாக்டவுனிலேயே குறைத்துவிடலாம்.