தப்பித்தவறியும் இந்த காய்களின் மற்ற பகுதிகளை சாப்பிடாதீங்க..உயிருக்கே ஆபத்தாக முடியும்...!

உணவுப் பொருட்களை எப்போதும் வீணாக்கக் கூடாது. அதிலும், சமைக்கும் காய்கறி முதல் பழங்கள் வரை அதன் எந்த பாகங்களையும் வீணாக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

எனினும் சில காய்களிகளின் வேர் மற்றும் தண்டு உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடும். அதிலும் சில ஆபத்தானவை கூட. இப்போது அப்படிப்பட்ட சிலவற்றை தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

அஸ்பாரகஸ் பெர்ரி

இந்த பழுத்த பெர்ரிக்கள் பெரும்பாலும் புதர்களில் காணப்படும். இவற்றில் சப்போஜெனின்கள் உள்ளன. அவை ஒருவரை நோய்வாய்ப்படுத்தக்கூடும். இந்த சப்போஜெனின்கள் மனிதர்கள் உடலில் நச்சுத்தன்மையாக செயல்படுவதோடு, விலங்குகளுக்கு விஷமாக செயல்படுகின்றன. இந்த பெர்ரிகளை நீங்கள் சாப்பிட்டால், உங்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

பச்சை உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கானது இரவில் மலரும் செடி குடும்பத்தை சேர்ந்தது. இந்த குடும்பத்தின் தாவரங்கள், சோலனைன் எனும் நச்சு கலவையை தங்களுக்குள் சேமித்து வைக்கின்றன. இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவை.

தக்காளியின் இலைகள்

தக்காளியும், உருளைக்கிழங்கின் குடும்பத்தைச் சேர்ந்தது தான். எனவே, அவை ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக கருதப்படுவதில்லை. ஐரோப்பாவில், 200 ஆண்டுகளுக்கும் மேலாக இதைப் பயன்படுத்த மக்கள் பயந்து வருகின்றனர். தக்காளி இலைகளில் சோலனைன் மற்றும் டொமேடைன் ஆகியவை உள்ளன. இது வயிற்று வலியை ஏற்படுத்தக்கூடும்.

கத்திரிக்காய் இலைகள் மற்றும் பூக்கள்

கத்திரிக்காய் என்பது இரவில் மலரும் தாவரங்களின் குடும்பத்தை சார்ந்தது. கத்திரிக்காய் இலைகள் மற்றும் பூக்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. இதன் இலைகள் மற்றும் பூக்களில் நச்சு தன்மை கொண்ட சோலனைன் இருப்பதால், அவை வயிற்று வலி மற்றும் தலைவலியை ஏற்படுத்தக்கூடும்.