அளவுக்கு மீறிய தொப்பை இருந்தால் ஆயுள் குறையுமா..? அலட்சியம் வேண்டாம்!

சமீபத்திய ஆய்வில் வயிற்றில் அளவுக்கு அதிகமான கொழுப்பு இருந்தால் விரைவில் மரணத்தை சந்திப்பதற்கான வாய்ப்பு அதிகம் என எச்சரிக்கிறது.

BMJ இதழ் வெளியிட்டுள்ள இந்த ஆய்வுக் குறிப்பு உடலின் நடுப்பகுதியான வயிற்றில் அதிக கொழுப்பு சேருவது உங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்கான எச்சரிக்கை ஒலி என்கிறது.

ஏற்கெனவே பல ஆய்வுகள், அதிக உடல் எடை உடல் ஆரோக்கியத்திற்க் நல்லது அல்ல. அதனால் இதய நோய், சிறுநீரக தொற்று, புற்றுநோய் இப்படி பல வகையான பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என தெரிவிக்கின்றன.

அந்த வரிசையில் வயிற்றில் மட்டும் அளவுக்கு அதிகமான கொழுப்பு சேர்வது ஆபத்தை உண்டாக்கும் என்பது கூடுதல் தகவலாக வந்துள்ளது.

இந்த ஆய்வானது 27 முந்தைய ஆய்வுகளை ஆராய்ந்துள்ளது. அதுமட்டுமன்றி 2.5 மில்லியன் மக்களை ஈடுபடுத்தி அவர்களை 24 வருடங்கள் கண்காணித்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.

இதில் இடுப்பு சுற்றளவு, மார்பக சுற்றளவு, தொடை சுற்றளவு என ஒவ்வொன்றாக அளவுகளை கணக்கெடுத்து. அந்த சுற்றளவில் சேர்ந்திருக்கும் கொழுப்பையும் தனியாக கணக்கிட்டுள்ளது. அதோடு அவர்களின் உடல் அமைப்பையும் கணக்கிட்டுள்ளது.

ஒருவரின் உடல் அமைப்பு, உயரத்தை விட பெருகும் ஒவ்வொரு 10 செ.மீ (3.94 இன்ச்) கொழுப்புக்கும் 11 சதவீத இறக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளதாக எச்சரிக்கிறது. ஒருவரின் உடல் அமைப்பு, உயரத்தை விட பெருகும் ஒவ்வொரு 10 செ.மீ (3.94 இன்ச்) கொழுப்புக்கும் 11 சதவீத இறக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளதாக எச்சரிக்கிறது.

இதில் இடுப்பு மற்றும் தொடை அமைப்பு அகலமாக இருப்போருக்கு ஆபத்து குறைவு என கூறுகிறது.

இறுதியாக ஒட்டுமொத்த உடல் பருமனைக் காட்டிலும் வயிற்றில் மட்டும் கொழுப்பு சேருவது கூடுதல் ஆபத்தை கொண்டது என எச்சரிக்கிறது.

எனவே முறையான வாழ்க்கை முறையினால் இந்த ஆபத்தை தவிர்க்கலாம். கொழுப்பைக் கரைக்கலாம்.