உறவினர்களால் கூட்டு பலாத்காரம்! கோவிலில் எரித்துக் கொல்லப்பட்ட கொடூரம்

உத்திரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கோவில் வளாகத்துக்குள் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசத்தின் மொராதாபாத் நகரில் உள்ள பகுதி ராஜ்புரா.

இங்கு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது மகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று உறவினர்கள் ஐந்து பேர் வந்துள்ளனர்.

மகளை வெளியே அனுப்பிவிட்டு, குறித்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

தன்னைவிட்டு விடும்படி எவ்வளவோ கெஞ்சியும், கொடுமைப்படுத்துவதை நிறுத்தவில்லை.

இந்நிலையில் அவர்கள் அங்கிருந்த சென்றவுடன், தனது கணவருக்கு போன் செய்ய முயற்சித்துள்ளார், கணவரை தொடர்பு கொள்ள முடியாமல் போக பொலிசுக்கு அழைத்துள்ளார்.

அவர்களும் அழைப்பை எடுக்காத நிலையில், திரும்பி வந்த கொடூரர்கள், கோவிலுக்கு அழைத்து சென்று அக்னிகுண்டத்துக்குள் தள்ளி தீ வைத்துள்ளனர்.

இதில் கருகி துடிதுடித்து இறந்துவிட, அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் பொலிசார் விரைந்து வந்தனர்.

இதனைதொடர்ந்து கோவிலில் இருந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.