தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட தமிழக வீரர்..

காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தமிழக வீரர் இளையராஜாவின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்டம் கண்டனி கிராமத்தைச் சேர்ந்த இளையராஜாவின் உயிரிழப்பு வேதனையளிப்பதாக கூறியுள்ளார். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரரை இழந்துவாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த ராணுவ வீரர் இளையராஜாவின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். காயமடைந்த பாதுகாப்பு படை வீரர்கள் 12 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.