அம்பானியின் பிள்ளைகளுக்கு தாயாரால் கொடுக்கப்பட்ட செலவுப்பணம் எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் பிரபல தொழிலதிபரும் முதல் பணக்காரருமான முகேஷ் அம்பானிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

ஆகாஷ், இஷா மற்றும் ஆனந்த் ஆகியோரே அம்பானியின் மூன்று பிள்ளைகளும். இந்த மூன்று பேரும் அடுத்த தலைமுறைக்கான தொழிலதிபர்கள் வரிசையில் இணைந்துள்ளனர்.

தகப்பன் காட்டிய வழியில் பயணித்துக்கொண்டிருக்கும் இவர்கள் 3 பேரும் தங்களது சொந்தப்பள்ளியான திருபாய் அம்பானி பள்ளியில் படித்தபோது, இவர்களது தாய் நீதா அம்பானி, இவர்கள் 3 பேருக்கும் வெறும் 5 ரூபாய் மட்டும் தான் பாக்கெட் மணியாக கொடுப்பாராம்.

பள்ளியில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் ஏதாவது வாங்கணுமென்றால் அந்த 5 ரூபாய்க்குள்தான் எல்லாமே. பணத்தின் மதிப்பினை அறிந்துகொள்வதற்காகவே தனது பிள்ளைகளுக்கு அவர் இவ்வாறு செய்துள்ளார்.

இளைய மகன் ஆனந்த் அம்பானி ஒரு முறை, தனது தாயிடம் சென்று எனக்கு இன்னும் 5 ரூபாய் அதிகமாக சேர்த்து மொத்தம் 10 ரூபாய் பாக்கெட் மணியாக தரவேண்டும் என கூறியுள்ளார்.

எதற்காக, இவ்வாறு கேட்கிறாய் என நீதா கேட்டதற்கு, நான் எனது பையில் இருந்து 5 ரூபாயை எடுக்கும்போது எனது நண்பர்கள் என்னை பார்த்து சிரிக்கின்றனர் என கூறியுள்ளார்.

இதனை கேட்ட நீதா, அவர்கள் சிரித்தாலும் பரவாயில்லை. ஆனால் பணத்தின் மதிப்பினை அறிந்துகொண்டு அதனை செலவு செய்ய கற்றுக்கொள் என கூறி மேலதிக பணம் தர மறுத்துவிட்டார்.