நிறம்மாறும் நாய்கள்.. அதிர்ச்சி தரும் காரணம்..!

மகாரஷ்ட்ரா மாநிலம் மும்பையில் பொதுவெளியில் வெளியேற்றப்படும் ரசாயணம் கலந்த நீரை அருந்தும் நாய்கள் நீல நிறமாக மாறி வருகின்றன.

ஆர்த்தி சௌகான் என்பவர் இந்த விவகாரத்தை கையில் எடுத்து ரசாயண நீரை வெளியிடும் தொழிசாலைக்கு எதிராக மாநில மாசுக்கப்பட்டு வாரியத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் ரசாயண கழிவுநீர் தொடர்பான ஆய்வு முடிவுகள், மருத்துவ சான்றுகள், புகைப்படங்கள் அடங்கிய ஆதாரங்களை மாநில மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளிடம் அவர் சமர்பித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட அது தேசிய ஊடங்கள்வரை எதிரொலித்தது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள மிருகவள ஆர்வலர்கள் இதனை எதிர்த்து தற்போது குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.