பொலிசாரிடம் தப்பிக்க நடுவீதியில் நடனமாடிய திருடனுக்கு நேர்ந்த கதி..!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பொலிசாரிடம் இருந்து தப்பிக்க நடுவீதியில் விதவிதமாக நடனமாடிய திருடன் கைது செய்யப்பட்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி நகரைச் சேர்ந்த ரின்கு படோரியா என்பவர் வீதியில் செல்பவர்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபடுபவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் பொலிசாரிடம் மாட்டிக்கொண்டார்.

பொலிசார் விசாரித்த போது, தான் திருடன் அல்ல என்றும் நடனமாடுபவர் என்றும் தெரிவித்துள்ளார். நடனமாடுபவர் என்றால், நடனமாடி காண்பிக்குமாறு பொலிசார் தெரிவித்தபோது உடம்பை வளைத்து பலவித நடனங்களை ஆடியுள்ளார்.

நடனமாடியும் அவரால் தப்பிக்க முடியவில்லை. பொலிசார் அவரை கைது செய்தனர். ரின்கு பொலிசார் முன்பு நடனமாடிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.