21 வயது யுவதி மற்றும் 19 வயது இளைஞரின் அதிர்ச்சிகர செயல்!

21 வயது யுவதி மற்றும் 19 இளைஞரின் வீட்டிற்கு தெரியாமல் இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒன்று உரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

19 வயது இளைஞரும் 21 வயது யுவதியும் உறவினர்கள்.

இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதோடு, காதலித்தும் வந்தனர்.

வயது வித்தியாசத்தை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

எனினும் வீட்டில் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்பதால், வீட்டிற்கு தெரியாமல் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இதனையறிந்த இரு வீட்டாரும் வேறு வழியில்லாததால் திருமணத்தை ஏற்றுக் கொண்டனர்.

இதுபற்றி சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு சிலர் போட்டுக் கொடுத்தனர்.

இதனையடுத்து வீட்டிற்கு வந்த அதிகாரிகள் இருவரையும் பிரித்து அவரவர் பெற்றோருடன் இருக்குமாறு எச்சரித்தனர்.

அந்த பையனுக்கு 19 வயது தான் ஆகிறது, 21 வயது ஆனவுடன் இருவரையும் சேர்த்து வையுங்கள் என அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.