நான் திரும்ப வருவேன்! பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ள பிரபாகரன் திரைப்படம்

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை கதைக்களமாக கொண்டு தெலுங்கில் உருவாகியிருக்கும் "ஒக்காடு மிகிலாடு" Okkadu Migiladu என்ற திரைப்படத்தின் முன்னோடி காட்சி (trailer) வெளியாகியுள்ளது.

குறித்த திரைப்படமானது "நான் திரும்ப வருவேன்" என தமிழ் மொழியில் வெளியாகவுள்ளதுடன், தமிழ் மொழி மூலமான இந்த திரைப்படத்தின் காட்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நேற்றைய தினம் வெளியாகியுள்ள "நான் திரும்ப வருவேன்" திரைப்படத்தின் முன்னோடி காட்சி சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.