கதறி அழுந்த சாமியார்.. சந்தேகத்தை கிளப்பும் வன்முறையின் பின்னணி.. மக்கள் பலியாடா

இரண்டரை மணிக்கு தீர்ப்பு..சுமார் 12.30 மணியளவில் தனது ஆசிரமத்தில் இருந்து 200 வாகனங்கள் சூழ நீதிமன்ற கிளம்பினார் பிரபல சாமியார் ராம் ரஹிம் சிங். அவர் நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்பாகவே அவரது ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகம் முன்பாக திரண்டிருந்தனர்.

எப்போது உற்சாகமாக இருக்கும் ராம் ரஹிம் அன்று மட்டும் சோகத்துடன் காணப்பட்டார். தீர்ப்பு தனக்கு எதிராக தான் இருக்கும் என்பதை சாமியார் ஏற்கெனவே அறிந்து இருந்தாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ராம் ரஹிம் குற்றவாளி என்று நீதிபதிகள் அறிவித்த பிறகு அவர் அழுததாக கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக நேரடி செய்திகளை வழங்க இந்தி, ஆங்கில செய்தி தொலைக்காட்சிகள் நீதிமன்ற வளாகம் வெளியே இருந்தன.

இது தொடர்பாக பேசிய பத்திரிகையாளர் ஒருவர் தீர்ப்பு வருவதற்கு முன்பாக தங்களிடம் நன்றாக பேசி வந்த சாமியாரின் ஆதரவாளர்கள் தீர்ப்புக்கு பிறகு தங்களை தாக்க ஆரம்பித்துவிட்டதாகவும் தெரிவித்தார், இந்நிலையில் சாமியார் ராம் ரஹிம் வழக்கின் தீர்ப்பு மற்றும் அதனை தொடர்ந்து நடந்த வன்முறை தொடர்பாக பல்வேறு கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

சிபிஐ நீதிமன்றம் வெளியே பெட்ரோல் குண்டு வந்தது எப்படி..?

கடந்த 2014 ஆம் ஆண்டு சாமியார் ராம் ரஹிம் பாஜகவை ஆதரித்தது உண்மையா..?

பத்திரிகையாளர்களை தாக்க வேண்டிய அவசியம் என்ன..?

சாமியாரின் மடத்தில் ஆயுத பயிற்சி வழங்கப்பட்டதா… ஆசிரமத்தை சோதனையிடுமா மத்திய அரசு..

வன்முறைக்கு உண்மையில் சாமியார் தான் காரணமா.. அல்லது வேறு ஏதேனும் இயக்கங்களின் பின்னணி இருக்குமா..

ஆயுதங்களுடன் வந்த ஆதரவாளர்களை போலீசார் அனுமதித்தது எப்படி..

இத்தனை நாள் சாமியார் ராம் ரஹிமுக்கு செட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியம் என்ன..?

தீர்ப்பு வெளியாகும் திங்கட்கிழமை என்ன நடக்கும்.. தீர்ப்பு வெளியாகுமா..?