பலாத்கார சாமியார் ரஹீம் ஆசிரமத்திலிருந்து 18 சிறுமிகள் மீட்பு...

தேரா சச்சா சவுதா' என்ற மைப்பின் தலைவர் ராம் ரஹீம் சிங். சில நாட்களுக்கு முன்பு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம்.

1000 ஏக்கர் பரப்பளவில் உள்ள இவரது தலைமையகத்தில் தான் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். தற்சமயம் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் தலைமை ஆசிரமத்தில் இருந்து 18 சிறுமிகள், இளம் பெண்களை மீட்டு உள்ளது என்றும் அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி உள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சாமியாரின் மற்ற இடங்களிலுள்ள ஆசிரமங்கள் சீல் வைக்கப்பட்டுவிட்டன. ஆனால் தலைமையகத்திற்கு இன்னும் சீல் வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.