ஒரே இளைஞருக்கு இரண்டு பெண்களுடன் திருமணம்!! ஊரில் பரபரப்பு

திருச்சுழி அருகே உள்ள ம.வெள்ளையாபுரத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி(31). படிக்காததால் ஆடு மேய்த்துக் கொண்டு அக்கா, கலைச்செல்வி வீட்டிலேயே வளர்ந்து வந்தார்.

இவருக்கு அக்காமகள் ரேணுகா தேவி மற்றும் காயத்ரியை 4-ம் தேதி திருமணம் செய்து வைக்க நிச்சயம் செய்யப்பட்டது. இந்த திருமணத்தின் பத்திரிக்கையானது சமூக வலைத்தளங்களில் பரவியது.

ஒரே இளைஞருக்கு இரண்டு பெண்களுடன் திருமணம்: விருதுநகர் அருகே பரபரப்பு

இதனை அறிந்த சமூக நலத் துறை அலுவலர் ராஜம், இரு பெண்களை திருமணம் செய்வது ஏற்புடையது அல்ல என கூறினார்.

உடனே இதற்கு விளக்கம் அளித்த ராமமூர்த்தியின் மாமனார் அழகர்சாமி 'ராமமூர்த்திக்கு இருதார தோஷம் இருப்பதால் இவ்வாறு ஏற்பாடு செய்தோம்.

மேலும் காயத்ரி மனநிலை சரி இல்லாத காரணத்தால் அவருக்கு தாலி மட்டும் கட்டிவிட்டு பின்னர் ரேணுகா தேவியுடன் தான் சேர்ந்து வாழ்வார்' என தெரிவித்துள்ளார்.

இதனை பற்றி சமூக நலத்துறை அலுவலர் ராஜம் கூறுகையில், இரு வீட்டாருக்கும் ஏற்புடையதாக இருந்தாலும் யாரேனும் புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.