அனிதாவுக்காக குரல் கொடுத்த கீர்த்தி.. நெகிழ்ந்த நெட்டிசன்கள்,அதிர்ந்த திரையுலகம்

உயிரை விடுவது எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். நீட் தேர்வால் மருத்துவ கனவு தகர்ந்த அரியலூர் மாணவி அனிதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாணவியின் தற்கொலைக்கு நீதிகேட்டு மாணவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மாணவி உயிரிழப்பு குறித்து டிவிட்டரில் தனது கருத்தை பிரபல திரைப்பட நடிகை கீர்த்தி சுரேஷ் பதிவிட்டுள்ளார். அதில் மாணவியின் தற்கொலை செய்தி கேட்டு கவலையில் ஆழ்ந்ததாக தெரிவித்து இருக்கிறார்.

மேலும் இது போன்ற தற்கொலை முடிவுக்கு மாணவர்கள் யாரும் இனி வரவேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அனிதாவின் தற்கொலைக்கு தனது வருத்தத்தை தமிழ திரையுலக பிரபலங்கள் பலரும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.