நலமாக இருக்கின்றீர்களா? சிறையில் அமைச்சரும் சசிகலாவும் உரையாடல்!

நலமாக இருக்கின்றீர்களா? சிறையில் அமைச்சரும் சசிகலாவும் உரையாடல்!

சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை கர்டநாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி சந்தித்து நலன் விசாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்துறை அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் ராமலிங்க ரெட்டி நேற்றைய தினம் குறித்த சிறைச்சாலைக்கு சென்று ஆய்வு ஒன்றினை நடத்தியுள்ளார்.

இதன்போது சசிகலா அடைக்கப்பட்டுள்ள, சிறையின் பெண்கள் பகுதிக்கும் அமைச்சர் சென்றுள்ளார்.

அங்கு அமைச்சரைப் பார்த்த சசிகலா அவரிடம் “வணக்கம், நலமாக இருக்கின்றீர்களா? என்ற பல நலன் விசாரிப்பு கேள்விகள் அடங்கிய உரையாடலை மேற்கொண்டுள்ளார்.

ராமலிங்க ரெட்டியும், சசிகலாவின் கேள்விகளுக்கு தமிழ் மொழியிலேயே பதில் கூறியதாகவும் சிறைதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன் பின்னர், ராமலிங்க ரெட்டி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, கௌரி லங்கேசை கொலை செய்தவர்களும் விரைவில் இதே சிறையில் அடைக்கப்படுவார்கள் எனவும், சிறையில் எவருக்கும் தனிச்சலுகைகள் கொடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.