திருப்பதி கோவிலில் அலறியடித்து ஓடிய பக்தர்கள்..! நடந்தது என்ன??

திருப்பதி கோவிலில் அலறியடித்து ஓடிய பக்தர்கள்..! நடந்தது என்ன??

தினந்தோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் குவியும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திடீரென இன்று மின்கசிவு ஏற்பட்டதால் ஒருசில பக்தர்கள் காயம் அடைந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

திருப்பதி ஏழுமலையான கோவிலில் பிரதான வாசலில் உள்ள ஸ்கேனரில் இருந்து இன்று காலை திடீரென மின்கசிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் சிலருக்கு ஷாக் அடித்து காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து தரிசனத்திற்கு காத்திருந்த மற்ற பக்தர்கள் பயத்தில் அலறியடித்து ஓடியதால் ஒருசிலர் கிழே விழுந்து காயம் அடைந்தனர்.

மின்கசிவு குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் வந்து மின் இணைப்பை துண்டித்தனர்.

இந்த சம்பவத்தால் திருப்பதி கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.