பாலியல் பலாத்காரத்தில் சிக்கிய பெண்!!

கேரள மாநிலத்தின் கோழிக்கோடில் கடந்த வாரம் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இந்த வீடியோ சமூக தளங்களில் வைரலாக பரவி வந்தது. இதைத் தொடர்ந்து, 33-வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.

கைதான அந்த நபரின் பெயர் ஜாம்ஷெர் என்றும், சமூக தளங்களில் பரவிய அந்த வீடியோவை அடிப்படையாக வைத்து அந்த நபரை கைது செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ஜாம்ஷெர் மீது பாலியல் துன்புறுத்தல், பெண் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது ஆகிய பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த வீடியோ பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில், ஜாம்ஷெர் ஒரு பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்கிறார். சிறிது நேரத்திற்கு பிறகு, அந்த நபர் அங்கிருந்து தப்பிச் செல்கிறார். அவரை பாதிக்கப்பட்ட பெண் துரத்திச் செல்கிறார்.

இந்த வீடியோ வைரல் ஆக ஆரம்பித்த பின்னர், வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளியை கைது செய்தனர். அந்தப் பெண் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.