பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் முகத்தை மாற்றிய திருடன்: காரணம் காதலா?

போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் முகத்தை மாற்றிய திருடன் 4 வருடங்களுக்கு பிறகு பிடிபட்டான்.

டெல்லியில் கார் திருடுவதில் மிக முக்கிய குற்றவாளியாக இருந்தவர் குணா. டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் கார், இருசக்கர வாகனங்கள் திருடியதில் மட்டும் இவர் மீது 62 வழக்குகள் உள்ளன.

இவரை பிடிப்பதற்காக போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டதால், 4 வருடங்களுக்கு முன்னர் பிளாஸ்டிக் சர்ஜரியின் மூலம் முகத்தை மாற்றியுள்ளார். இவரோடு சேர்த்து இவருடைய இரண்டு நண்பர்களும் முகத்தை மாற்றியுள்ளனர்.

இந்த தகவலறிந்த போலீசார், 4 வருடமாக சுதந்திரமாக இருந்த திருடனை கைது செய்தனர். இதுகுறித்து டெல்லி காவல்துறை இணை ஆணையர் ரோமில் பானியா கூறுகையில், டெல்லியை சேர்ந்த குணால் தெற்கு டெல்லியின் நேரு பேலஸ் பகுதியில் கைது செய்யப்பட்டார்.

அவருடைய வேலையே வாகனங்களை திருடி விற்று, அந்த பணத்தை தனது காதலியுடன் உல்லாசமாக செலவு செய்வதுதான். குணாலை விசாரித்ததில், அவருடைய கூட்டாளிகள் இர்ஷாத் அலி மற்றும் முகமது ஷாஹேப் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த திருட்டுப் பொருட்களை வாங்கும் வியாபாரிகள். இவர்களை கைது செய்யும்போது 12 கார்கள் பறிமுல் செய்யப்பட்டது.