சிரியாவில் இறந்துபோன மனிதநேயம்… ஆனால் இது...

சிரியா நாட்டை சேர்ந்த சிறுவன் துருக்கி நாட்டின் கடற்கரையில் சடலமாக மீட்க்கப்பட்டது தொடர்பான புகைப்படம் உலகநாடுகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஒரு புகைப்படம் சிரியா நாட்டின் மீது நடத்தப்பட்டு வந்த தொடர் தாக்குதலுக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தது. அந்த ஒரு புகைப்படம் உலகம் எங்கும் பரவிவாழும் மனிதாபிமானிகளை தட்டி எழுப்பியுள்ளது.

தமிழகமே வெட்கிதலைகுனியும் அளவிற்கு நெல்லை மாவட்டத்தில் நடந்துள்ளது தீக்குளிப்பு சம்பவம். இதற்கு யார் காரணம் என்ற விவாதத்திற்குள் செல்லாமல் கந்துவட்டி என்பது இன்று, நேற்று தொடங்கிய பிரச்சனை அல்ல.

காலம்காலமாக கிராமங்களில் கந்துவட்டியால் ஏற்படும் தற்கொலைகள், மிரட்டல்கள் என ஏராளமான புகார்கள் வந்தும் அதற்கு அரசு உரிய வகையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டிருந்தல் இந்த குடும்பம் தங்களது உயிரை மாயித்துகொள்ள வேண்டியநிலை ஏற்பட்டிருக்குமா என்ற கேள்வி சாமானிய மக்கள் மத்தியில் எழுகிறது.

இந்நிலையில் துருக்கி நாட்டின் சிறுவனின் படத்தையும் நெல்லை மாவட்டத்தில் தீக்குளிப்பு சம்பவத்தால் உயிரிழந்த சிறுவனின் புகைப்படத்தையும் இணைத்து சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.