பேஸ்புக்கினால் வேகமாக அதிகரிக்கும் விவகாரத்துக்கள்!! புள்ளி விபரங்கள் தரும் அதிர்ச்சித் தகவல்

உலகில் நடக்கும் விவாகரத்துகளில் அதிகளவு விவாகரத்து பெற பேஸ்புக் தான் முக்கிய காரணம் என அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்களை பிரசித்தி பெற்ற டெய்லி மெயில் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

முன்பெல்லாம் கணவன், மனைவி விவாகரத்து பெறுகிறார்கள் என்றால் அது, குடிப்பழக்கம், சண்டை, வரதட்சணை, சந்தேகப்படுதல், குழந்தையின்மை என்று தான் காரணங்கள் இருக்கும்.

ஆனால், தற்பொழுது இவை அனைத்தையும் முந்திக்கொண்டு தற்போது பேஸ்புக் செல்வதாக புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன.இதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன் மும்பையில் ஒரு பெண் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மிகவும் சாதாரண விவாகரத்து வழக்காக கடந்து செல்லப்பட வேண்டிய வழக்கு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதில் அவர் ”என் கணவர் அதிகமாக பேஸ்புக் உபயோகப்படுத்துகிறார். அவருக்கு என்னுடன் திருமணம் ஆனதை இது வரை பேஸ்புக்கில் அப்டேட் செய்யாமலும் இருக்கிறார்” என்று புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து இந்தச் சம்பவம் அதிக அளவில் பிரபலம் ஆனது.ஆனால் உலகில் இதுபோல் 5000 பேர் பேஸ்புக்கை காரணம் காட்டி விவாகரத்து வாங்குவதாக கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.

இது, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் தான் அதிகம் நடப்பதாகவும் டெய்லி மெயில் இணையதளத்தின் கணிப்பு மேலும் தெரிவிக்கின்றது.