சாலையில் தரையிறங்கிய போர்விமானங்கள்: வேடிக்கை பார்க்க கூடிய பொதுமக்கள்

அவசர காலங்களில், ஆக்ரா - லக்னோ விரைவு சாலையில் போர் விமானங்களை தரையிறக்குவதற்கான ஒத்திகை நடத்தப்பட்டது.

அவசர காலங்களில் போர் விமானங்களை தரையிறக்குவதற்கான ஒத்திகை ஆக்ரா - லக்னோ விரைவு சாலையில் இன்று நடைபெற்றது. இதுபோன்ற நிகழ்வுகள் பல்வேறு நாடுகளில் நடைபெற்றாலும் இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். அந்த வகையில், இந்திய விமான படைக்கு சொந்தமான சி-130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் போர் விமானம் விரைவு சாலையில் தரையிறங்கியது. ரூ.900 கோடி மதிப்பிலான, 35 ஆயிரம் கிலோ எடை கொண்ட இந்த விமானத்தில் 200 வீரர்கள் செல்ல முடியும். இதில் 16 போர் விமானங்கள் கந்துகொண்டன.

போர்க்களங்களில் விமானத்தளம் தாக்கப்படும்போது சாலைகளில் எவ்வாறு தரையிறக்குவது என்பதற்கான ஒத்திகையே இதுவாகும். சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற இந்த ஒத்திகையை பார்க்க ஏராளமான பொதுமக்கள் கூடினர்.