அடித்துக்கொல்லப்பட்ட கர்ப்பிணி

உத்திரபிரதேசத்தில் எதிர்பாராத விதமாக குப்பைத்தொட்டியை தொட்டதால் கரிப்பிணி பெண்ணை அடித்து உதைத்துள்ளனர். இதில் அப்பெண் பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளார்.

புலண்ட்சர் மாவட்டத்தை சேர்ந்த கேட்டல்புர் பன்சோலி கிராமத்தை சேர்ந்தவர்கள் திலீப்குமார் - சாவித்ரி தேவி தம்பதியினர். தலித் பிரிவைசேர்ந்த இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகள் உள்ளார்.

தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சாவித்ரி, அதே கிராமத்தை சேர்ந்த தாகூர் சமூகத்தை சேர்ந்த அஞ்சு தேவி என்பவரின் வீட்டருகே கடந்த 15-ம் தேதி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் அங்கிருந்த குப்பை தொட்டியை தொட்டதால் தீட்டு பட்டு விட்டதாக அஞ்சு தேவி அவரை தாக்க ஆரம்பித்துள்ளார்.

இவரோடு சேர்ந்து அஞ்சு தேவியின் மகனான ரோஹித் குமாரும் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்துள்ளார். வலி தாங்க முடியாத சாவித்ரி அங்கேயே மயக்கமடைந்து விழுந்தார்.

இவையனைத்தும் அந்த 9 வயது சிறுமியின் கண்முன்னே நிகழ்ந்தது. இதனையடுத்து சாவித்ரியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சாவித்ரி கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின் பெரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.