சசிகலாவின் உறவினர்களிடமிருந்து 1,430 கோடி வரி செலுத்தாத சொத்துக்கள்: வரித்துறையினர் விளக்கம்!

சசிகலாவின் உறவினர்களிடமிருந்து 1,430 கோடி வரி செலுத்தாத சொத்துக்கள்: வரித்துறையினர் விளக்கம்!

சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில், வருமான வரித்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, 1, 430 கோடி வரி செலுத்தா சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக, வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே, மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இந்த சோதனையின் போது 7 கோடி ஐந்து லட்சம் பெறுமதியான, கணக்கில் இடப்படாத நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, 15 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

குறித்த வங்கிக் கணக்குகள், சொத்துமதிப்பை அதிகமாக காட்டுவதனால், பரிசீலனை செய்வதற்காக முடக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அசையும், அசையா சொத்துக்கள் சிலவற்றையும், பரிசீலைனைக்கு உட்படுத்தி வருவதாக, வரித்துறை அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.