காதலுக்கு கிடைத்த வெற்றி: பிரிந்த மனைவியை பாடல் பாடி மயக்கிய கணவர்!

காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் கொடுத்திருந்த மனைவி, கணவனின் பாடலில் மயங்கி புகாரை வாபஸ் வாங்கி மீண்டும் இணைந்த சம்பவம் அங்கிருந்தவர்களுக்கு வியப்பை உண்டாக்கியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உத்திரபிரதேசத்தில் ஜான்சி மாவட்டத்தை சேர்ந்த, தம்பதியினர் இருவருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து விவாதம் முற்றிய நிலையில் இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அந்த பெண் கணவர் மீது அருகிலுள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அங்கிருந்த பெண் ஆய்வாளரும் இருவரையும் விசாரணைக்கு அழைத்திருந்தார். அங்கு இருவரும் நின்று கொண்டிருக்கும்போது கணவன் தன மனைவிக்கு பிடித்த பாடலை பாட ஆரம்பித்தார்.

இதை கேட்டதும் அந்த பெண் பாடலில் மயங்கி கணவரோடு மீண்டும் இணைந்தார். மேலும் அந்த வழக்கை வாபஸ் பெற்றார். இந்த நிகழ்வானது அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.