சிறுமியிடம் சில்மிஷம் செய்த இளைஞன்...வெச்சி செஞ்ச பொதுமக்கள்

அரக்கோணம் அருகே, 6 வயது சிறுமியை சில்மிஷம் செய்தவனை, போலீசார் கைது செய்தனர்.

வேலுார் மாவட்டம், அரக்கோணம் அருகே, போளிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர், கருப்பன், 20. இரண்டாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், வேலை இல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தார்.

அங்குள்ள அரசு பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்து வரும், 6 வயது சிறுமியை, நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு தன் பைக்கில் அழைத்துச் சென்று சில்மிஷம் செய்துள்ளார்.

சிறுமி கூச்சலிட்டதால், அருகில் இருந்த பொதுமக்கள், விரட்டிச் சென்று கருப்பனை பிடித்து தர்ம அடி கொடுத்து, அரக்கோணம் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரை கைது செய்து, வேலுார் சிறையில் அடைத்தனர்.