திருமண நிகழ்வில் மணமகளிற்கு நடந்த கதி! அதிர்ச்சியில் உறவினர்கள்

திருமண நிகழ்வில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலித்துக் கொண்டிருந்ததால், மணமகள் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் ஐதராபாத் சூர்யாபேட் பகுதியில் நடந்தது. காயத்ரிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜி.வேணு என்பவருக்கும் ஐதராபாத்தில் திருமணம் நடந்துள்ளது.

திருமணம் முடிந்து சில மணிநேரத்தில் மணமகள் இறந்துள்ளார். திருமணம் நிறைவடைந்ததும் மணமக்கள் இருவரும் குடும்பத்தினர் சிலருடன் ஆலயத்துக்குச் சென்று சுவாமி தரிசம் செய்து விட்டு திரும்பியுள்ளனர்.

ஆலயத்துக்கு வெளியே வந்த நிலையில் மணப்பெண் காயத்ரி திடீரென மயங்கி விழுந்ததார். அவரை அருகில் இருந்த வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

அவர்களுடைய நேரம் அங்கு வைத்தியர்கள் இல்லை. பின்னர் மற்றுமொரு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில், வழியிலேயே அவர் இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

திருமணத்தின் போது அதிக சத்தத்துடன் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் அதன் காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு மணமகள் உயிரிழந்திருக்கலாம் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

திருமணம் முடிந்து சில மணித்தியாலங்களில் மணமகள் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.