முகநூல் பதிவில் சர்ச்சைக்குரிய கருத்து: மருத்துவர் மீது வழக்கு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கபிஸ்தலத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(37). இவர் எலக்ட்ரோபதி மருத்துவராகவும், தமிழ் தேசிய குடியரசு கட்சித் தலைவராகவும் உள்ளார்.

இவர், ஜூலை 17-ம் தேதி கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் தெற்கு வீதியில் உள்ள ஒரு மண்டபத்தில், ‘தமிழர் பாதுகாப்பு, தமிழர் தாயக மீட்பு’ என்ற தலைப்பில் மாநாடு நடத்தப் போவதாக கூறி, தனது முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், சர்ச்சைக்குரிய வாசகங்களை எழுதியுள்ளதோடு, இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு மாநிலம் இடம்பெறும் பகுதியையும் சர்ச்சைக்குரிய வகையில் வரைந்து பதிவிட்டிருந்தார்.

இதை அறிந்த கும்பகோணம் மேற்கு போலீஸார், இந்திய ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்ததாக சிலம்பரசன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைத் தேடி வருகின்றனர்.