பேஸ்புக்கில் லைவ்வாக தற்கொலை செய்த இளைஞர் தடுக்காமல் வேடிக்கை பார்த்த 2750 மக்கள்

ஆக்ராவில் ராணுவத்தேர்தலில் தோல்வி அடைந்ததால் பேஸ்புக்கில் லைவ்வாகப் பேசிய பின் தற்கொலை செய்து கொண்டார் இதை மக்கள் தடுக்காமல் வேடிக்கை பார்த்து ரசித்து கொண்டுயிருந்தனர்.

ஆக்ராவைச் சேர்ந்தவர் முன்னா குமார் (24). பட்டதாரியான இவர். விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் ஆதர்சமாக இருந்துள்ளார். அதே போல, ராணுவத்தில் சேர வேண்டும் என்ற லட்சியத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் ஐந்துமுறை ராணுவத்தில் சேர்வதற்காக நுழைவுத் தேர்வை எழுதி தோல்வியடைந்துள்ளார்.

இதனால் விரக்தியில் இருந்த முன்னா குமார் நேற்று, காலையில் தன்னுடைய ஃபேஸ்புக்கில் லைவ்வாக தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகப் பேசியுள்ளார். இதனை 2750 பேர் லைவ்வாகப் பார்த்துள்ளனர். அதற்குப் பிறகு அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இளைஞரின் தற்கொலை வாக்குமூலத்தை 2750 லைவ்வாக பார்த்தும் அவர்களில் ஒருவர் கூட அந்த இளைஞரை காப்பாற்ற வேண்டும் என்று இளைஞரின் பெற்றோரைத் தொடர்புகொண்டோ, காவல்துறையை தொடர்பு கொண்டோ எச்சரிக்கை செய்யவில்லை. அதற்கான எந்த முயற்சியும் எடுக்காதது சமூக ஊடகங்களின் நட்புகள் குறித்த கேள்விகளையும் ஆதங்கத்தையும் உருவாக்கியுள்ளது.