பார்ப்போரை கண்கலங்க வைக்கும் கருணாநிதி தயாளு அம்மாளின் புகைப்படம்! வைரலாகும் புகைப்படம்

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் இணையதளத்தையும், சமூக வலைதளங்களையு் ஒரு புகைப்படம் உலுக்கி எடுத்து வருகிறது.

அந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் நெகிழ்ந்து போகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஆயிரம் அர்த்தங்களை அந்த புகைப்படம் எடுத்துக் கூறுகிறது.

ஒவ்வொருவரும் தங்களது மனதைப் பிசையும் வாசகங்களை போட்டு அதை ஷேர் செய்தும் வருகிறார்கள். தயாளு அம்மாள் வீட்டுக் கதவைத் திறந்து பார்க்கிறார். வெளியில் கருணாநிதி நிற்கிறார். இதுதான் அந்தப் புகைப்படம்.

அதற்கு ஒவ்வொருவரும் போடும் வாசகம்.. படிக்கப் படிக்க நெஞ்சைப் பிசைகிறது. உண்மையிலேயே கருணாநிதி இப்படித்தான் பேசியிருப்பாரோ என்று எண்ண வைக்கும் அளவுக்கு மக்கள் இதற்கு வரிகளைத் தீட்டி கண்களை குளமாக்கி வருகின்றனர்.

தயாளு செல்கிறேன், அன்பு உடன்பிறப்புக்கள் யாரேனும் வந்து, என்னை எங்கே? என்று கேட்டால். அண்ணாவை காண சென்றுவிட்டேன்..என்று கூறு என்று கருணாநிதி சொல்வது போல் கூறியிருப்பது பார்ப்போரின் கண்கலங்க வைக்கிறது.