நக்சலைட் மாவோயிஸ்ட் அமைப்பு காஷ்மீர் தீவிரவாதிகளுடன் இரகசிய தொடர்பு!

நக்சலைட் மாவோயிஸ்ட் அமைப்புகள் காஷ்மீர் தீவிரவாதிகளுடன் ரகசிய தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் பீமா கோரேகான் கலவரம் தொடர்பான விசாரணையின் போது கைப்பற்றப்பட்ட சில கடிதங்கள், மற்றும் காஷ்மீரில் கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில் உளவுத்துறை குறித்த அறிவித்தலை விடுத்துள்ளது.

குறித்த ஆதாரங்களின் அடிப்படையில், பல்வேறு நகரங்களைச் சேர்ந்த நக்சலைட் – மாவோயிஸ்ட்டுகள் காஷ்மீர் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளுக்கு நிதியுதவி செய்வது தெரியவந்துள்ளது.

அத்துடன் மாவோயிஸ்ட் இயக்கங்களை வலுப்படுத்தும் வகையில் 15 பேர் கொண்ட குழுவினர் காஷ்மீரின் அனந்த்நாக், பட்காம், பாரமுல்லா குப்வாரா, ஷோபியான் உட்பட பல இடங்களுக்கு சென்றதாகவும் உளவுத்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.