தமிழக வீரர் தருண் அய்யசாமி தாயார் மத்திய அரசிடம் கோரிக்கை!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண் அய்யாசாமிக்கு மத்திய அரசு வேலை வழங்க வேண்டும் என அவரது தாயார் பூங்கொடி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனிஷியாவில் நடைபெற்று வருகின்றன. இதில் 400 மீட்டர் தடை தாண்டி ஓடுதலில் தமிழக வீரர் தருண் அய்யாசாமி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 48.96 நொடிகளில் இரண்டாவதாக இலக்கை எட்டி அவர் வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இந் நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தருண் அய்யாசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அதேநேரம், தமிழக முதல்வரை அவருக்கு 30 இலட்சம் ரூபாய் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தந்தையை இழந்த அவருக்கு மத்திய அரசு வேலை வழங்க வேண்டும் என அவரது தாயார் பூங்கொடி கோரிக்கை விடுத்துள்ளார்.