நோயாளிகளுக்கு ஒரே ஊசியை போட்டாதால் ஒருவர் பலி: 25 பேர் ஆபத்தான நிலையில்...பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

மாவட்ட வைத்தியசாலை ஒன்றில் அனைத்து நோயாளிகளுக்கும் தாதி ஒருவர் ஒரே ஊசியை பயன்படுத்தியதனால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 25-க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை மற்றவருக்கு பயன்படுத்த கூடாது என்னும் உலக சுகாதார நிறுவனத்தின் விதிகளை மீறி அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே ஊசியையே போட்டுள்ளதுடன் ஊசியை முறைப்படி சுத்தப்படுத்தவுமில்லை.

இதனால் அவ்வாறு ஊசி போட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 25-க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுதொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.